/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளில் குடிநீர் குழாய் புதுப்பிப்பு நபார்டு திட்டத்தில் ரூ.19.89 கோடியில் துவக்கி வைப்பு

ADDED : செப் 06, 2024 05:36 AM
கம்பம்: கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் குடிநீர் திட்ட பகிர்மான குழாய்களை ரூ.19.89 கோடியில் புதுப்பிக்கும் பணியை எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
லோயர்கேம்ப்பிலிருந்து கூடலூர் , கம்பம் வழியாக கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் கேபிடி திட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.
இத் திட்டத்தில் இருந்த சிமென்ட் குழாய்களில் அடிக்கடி உடைந்து தண்ணீர் சப்ளை பிரச்னை ஏற்பட்டது. எனவே சிமென்ட் குழாய்களை மாற்றி இரும்பு குழாய்களை பதிக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
கம்பத்திலிருந்து தேவாரம் வரை 24 கி.மீ. தூர மெயின் பகிர் குழாய் புதுப்பிக்க குடிநீர் வாரியம் முடிவு செய்து, நபார்டு வங்கி ரூ.19.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இத் திட்ட துவக்க விழா பண்ணைப்புரம் பேரூராட்சியில் நடைபெற்றது. எம்.எல். ஏ ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ, கூறுகையில், கம்பத்திலிருந்து தேவாரம் வரை பகிர்மான குழாய் புதுப்பிக்கப்படும். இரும்பு பைப் பதிக்கும் பணி முடிந்த பின் மூன்று பேரூராட்சிகளுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கும் .
இதுவரை நாள் ஒன்றுக்கு 17 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்த பின் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் லட்சுமி, மோகன் ராஜா, பி.லட்சுமி ( தேவாரம் ) குடிநீர் வாரிய பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட பங்கேற்றனர்.