ADDED : செப் 04, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி உடற்கல்வித் துறை விளையாட்டு மன்றம் சார்பில், இளைஞர்களுக்கான யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.
கல்லுாரியின் செயலர் தாமோதரன் தலைமை வகித்தார்.
பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். முதல்வர் சீனிவாசன் உரை ஆற்றினார். உடற்கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.
மயக்கவியல்துறை தலைவர் டாக்டர் கண்ணன்போஜராஜ் யோகா முக்கியத்துவம் பற்றி பேசினார்.
தேனி அறிவுத் திருக்கோயில் செயலாளர் ராஜேந்திரன், தேனி மனவளக்கலை மன்ற பயிற்றுனர்கள், மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆங்கிலத்துறை மாணவி தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.