/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து தேனிக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

ADDED : ஏப் 20, 2024 06:10 AM
தேனி: தேனி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து இருந்து தேனி பஸ் ஸ்டாண்டிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இத்தொகுதியில் இன்று லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று மாலையே மாவட்டத்தில் உள்ள 1225 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு உரிய வசதிகள் இல்லை என அலுவலர்கள் புகார் கூறுகின்றனர்.
ஓட்டுப்பதிவு நாளிலும், ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4 அன்றும் விடிய விடிய மையங்களில் ஏராளமான அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றுவார்கள். இவர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல அந்த பகுதியில் போக்குவரத்து வசதி இல்லை.
எனவே இப் பகுதியில் இருந்து தேனி பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கை மீது தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட போக்குவரத்த்துறை மேலாளர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.