/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிரான்ஸ்பார்மரை மாற்ற வலியுறுத்தல்
/
டிரான்ஸ்பார்மரை மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கண்டமனூரில் கணேசபுரம் செல்லும் ரோட்டில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 10 ஆண்டுக்கு முன் இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதி வளர்ச்சி அடைந்ததால் அங்கு குடியிருப்புகள், கடைகள் அதிகமாகி விட்டன. டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. நெருக்கடியான இடத்தில் உள்ள இந்த மின் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.