/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்து கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
/
முத்து கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
முத்து கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
முத்து கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2025 04:10 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் முத்து கருப்பணசாமி கோயிலில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உத்தமபாளையம்- உ.அம்மாபட்டி செல்லும் வழியில் உள்ளது பாறையடி முத்து கருப்பணசாமி கோயில். மலைக் குன்று மீது இருந்த சிவன் கோயிலிற்கு காவல் தெய்வமாக 700 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மூலவர் முத்து கருப்பணசாமி நின்ற கோலத்தில் கையில் அரிவாளுடனும், முறுக்கிய மீசையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் இரண்டு பக்கங்களிலும் காவல் தெய்வங்களாக இரண்டு பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். கிடாவெட்டி காதணி விழா அதிகமாக நடைபெறும்.
சிதிலமடைந்த இந்த கோயிலை கடந்த 1997ல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.25 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணி,மகா கும்பாபிஷேகம் நடந்த ஹிந்து அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2023 செப் 12 ல் பாலாலயம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பிடிஆர்.விஜயராசன் தலைமையில் நடைபெற்றது.
ரூ.59 லட்சம் செலவில் உபயதாரர்கள் பலர் திருப்பணி செய்து வருகின்றனர்.
திருப்பணிகள் துவங்கி 17 மாதங்களாகிறது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த கோயில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.