/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
/
டாஸ்மாக்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2024 06:05 AM
கூடலுார்,:கூடலுார் மையப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ்ஸ்டாண்டில் கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகளும் அதிகம் உள்ளன. பள்ளி மாணவ மாணவியர்கள் செல்லும் வழித்தடமும் இதுவாகும். கட்டட பணியாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், வர்ணம் பூசும் பணியாளர்கள் அதிகம் கூடும் இடமும் இப்பகுதிதான். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இப்பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதற்கு அருகிலேயே மதுபான பார்களும் உள்ளன. குடிமகன்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சப்தம் இடுவதும், சண்டையிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இங்குள்ள டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியில் மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தேனி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

