ADDED : ஆக 15, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, ஆக. 15- -
சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., முத்துப்பால் தலைமையில் தேனி ரயில்வே ஸ்டேஷனில் ஏட்டுக்கள் ஆல்வின் போலீஸ்காரர்கள் வாழேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் போடி --மதுரை அதிவிரைவு பயணிகள் ரயில் பெட்டிகளில் ஆய்வு செய்தனர்.
பின் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகள், நடைமேடை, இரும்பு மேம்பாடம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
போடி ரயில்வே ஸ்டேஷனில் போடி வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.