ADDED : ஏப் 04, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்க உள்ளது. அதன் பின் ஓட்டுப்பெட்டிகள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி வளாகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
அங்கு ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத்திட்ட தனி சப்கலெக்டர் முரளி, பெரியகுளம் டி.ஆர்.ஓ., முத்துமாதவன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஓட்டுப்பெட்டிகள் வைப்பறையில் இருந்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பாதை, மின் இணைப்புகள், வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பற்றி ஆய்வு செய்தனர்.

