ADDED : ஆக 09, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அன்னஞ்சி கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கமிஷனர் சம்பத் ஆய்வு செய்தார். ஆய்வில், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள், இந்த கல்வியாண்டில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரிடம் கேட்டார். பின் 6ம் வகுப்பு, 10ம் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினார். 10ம் வகுப்பு மாணவர்களிடம் பாட சம்மந்தமாக கேள்வி கேட்டார்.
உடன் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் முனியசாமி அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.