/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 24, 2024 03:15 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு மாவட்டதிலும் நூற்றுக்கணக்கில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகள் உள்ளன. இந்த கடைகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, விற்பனை , காலாவதியானது, விலை, பில் புக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்வார்கள். இது நடைமுறையாக இருந்து வந்தது.இந் நிலையில் நேற்று காலை சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகள் குழு தேனி மாவட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாவட்ட அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு , உள்ளூர் அதிகாரிகளை கலக்கமடைய செய்துள்ளது.