/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி கட்டடங்கள் ஆய்வு: அறிக்கை தர உத்தரவு
/
பள்ளி கட்டடங்கள் ஆய்வு: அறிக்கை தர உத்தரவு
ADDED : ஆக 30, 2024 06:04 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி கட்டங்களை தாசில்தார்கள் ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள், அதனை புதுப்பிக்காதவர்கள் பற்றிய விபரம் வழங்க வேண்டும். இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
வேளாண் பணிக்கான இ-அடங்கல் பணியை விரைவு படுத்த வேண்டும்.
அரசு பணியாளர்கள் மீதான 17 ஏ, 17 பி, நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

