/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி
/
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 06:30 AM

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
தேனி லோக்சபா தொகுதி பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலில் பயன்படுத்த உள்ள ஓட்டு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இப்பணியின் போது தாலுகா அலுவலகங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இப் பணியை கேமராவால் கண்காணிக்கப்பட்டது. தாலுகா அலுவலகத்தின் வாயில் கதவில் இரண்டில் ஒன்று அடைக்கப்பட்டு ஒரு கதவின் வழியாக வேட்பாளர் முகவர்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பொதுமக்கள் உள்ளே வர அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
போடி: போடியில் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியினை கலெக்டர் ஷஜீவனா நேற்று பார்வையிட்டார். தாசில்தார் மணிமாறன் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. பயன்படுத்தப்படும் பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'சீல்' வைக்கப்பட்டன. சின்னங்கள் பொருத்துவது, 'சீல்' வைக்கும் போது வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

