/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை உற்று நோக்கும் உளவுத்துறை
/
பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை உற்று நோக்கும் உளவுத்துறை
பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை உற்று நோக்கும் உளவுத்துறை
பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை உற்று நோக்கும் உளவுத்துறை
ADDED : மார் 29, 2024 06:04 AM

ஆண்டிபட்டி : தேனி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
கடந்த காலங்களில் தேனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வி.ஐ.பி.,யாக வலம் வந்தபோது தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்ட அதே பாணியை தற்போதும் செயல்படுத்தி வருகிறார். தினகரன் பேசும் இடங்களில் அவர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கூட்டத்தை கூட்டி அலார்ட் செய்வதற்கு தனி 'டீம்' செயல்பட்டது.
அனைத்து கிராமங்களிலும் கூட்டத்தை கூட்டாமல் குறிப்பிட்ட கிராமங்களை தினகரன் பேசுவதற்கு தேர்வு செய்தனர். தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வெடி வெடித்தல், தோரணம், கொடி கட்டுதலை தவிர்த்து கூட்டத்தில் அதிக நபர்களை பங்கேற்க வைப்பதில் கவனம் செலுத்தி, அதற்கான முன்னேற்பாடுகளும் செய்திருந்தனர்.
தினகரன் பிரசார கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்தவர்கள் குறித்து உளவுத்துறை போலீசார் உன்னிப்பாக கவனத்துச் சென்றனர். கூட்டத்தில் இருந்தவர்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா, அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினரா அல்லது மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தினகரன் ஆதரவாளர்களா என்று பல்வேறு கோணங்களில் கூட்டத்தை கண்காணித்தனர்.
தொகுதியில் தினகரனுக்கு எந்தெந்த பகுதியில் செல்வாக்கு, வரவேற்பு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். தினகரன் போட்டியால் தேனி தொகுதி நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

