/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோளம் அறுவடை முடிந்த நிலையில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்
/
சோளம் அறுவடை முடிந்த நிலையில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்
சோளம் அறுவடை முடிந்த நிலையில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்
சோளம் அறுவடை முடிந்த நிலையில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்
ADDED : செப் 02, 2024 12:19 AM

போடி: போடி அருகே விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் சோளம், மக்காச்சோளம் அறுவடை முடிந்த நிலையில் இயற்கை முறையில் விளை நிலங்களுக்கு உரம் சேர்க்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
போடி தாலுகாவில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 800 ஏக்கருக்கு மேல் சோளம், மக்காச்சோளம் சாகுபடியாகிறது. மீனாட்சியம்மன் கண்மாயில் தொடர்ந்து நீர் தேங்கி வருவதால் ஆண்டு தோறும் நெல், சோளம், மக்காச்சோளம் சாகுபடி விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியில் நடைபெறும். தற்போது சோளம் அறுவடைக்கான சீசன் முடிந்த நிலையில் விளை நிலங்களில் உழவு செய்து விதைப்புக்கு தயார் படுத்தி வருகின்றனர்.
இயற்கை உரங்களால் மட்டுமே விளை நிலத்தின் உயிர் தன்மையை நிலை நிறுத்த முடியும் என்பதால், தற்போது இயற்கை உரமிட்டு வருகின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை தங்கள் விளை நிலங்களில் மேய்ச்சலுக்கும், தங்க வைத்தும் கிடைக்கும் சாணத்தை உரமாக மாற்றி வருகின்றனர். இயற்கை உரமேற்றும் பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பாகி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இயற்கை உரங்களால் மண்ணின் உயிர்தன்மை அதிகரித்து காணப்படும். ஆடு, மாடுகளின் சாணம், அதன் சிறுநீரில் மண்ணுக்கு தேவையான நைட்ரேட் உரங்கள் கிடைத்துவிடும். 50 முதல் 100 ஆடுகளை விளை நிலங்களில் உரமேற்றுவதன் மூலம் மண்ணின் தரம் உயர்ந்து பயிர் சாகுபடியில் விளைச்சல் அதிகமாக கிடைக்கும்.', என்றனர்.