/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு தீவிரம் ஜூன் 30ல் கிராம சபையில் ஒப்புதல்

ADDED : ஜூன் 19, 2024 04:59 AM
தேனி : தமிழக அரசின் கனவு இல்லம் திட்டதிற்கு பயனாளிகள் தேர்வு பணி இருநாட்களுக்குள் நிறைவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 2030க்குள் 8 லட்சம் கன்கிரீட் வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் அமைக்கப்பட உள்ளன. பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மண்டல துணைத்தாசில்தார் நிலையிலான அதிகாரி தலைமையில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளடக்கிய குழு சர்வே பணி மேற்கொண்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: பயனாளிகள் தேர்வு செய்யும் பணி சில தினங்களில் நிறைவு பெற உள்ளது. இத்திட்டத்தின் படி 300 ச.அடியில் கான்கிரீட் வீடு, 60 ச.அடியில் தீப்பற்றாத பொருட்களை மேற்கூரையாக அமைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை அமைக்க வழங்கப்படும் ரூ.12 ஆயிரத்துடன் வீட்டின் மதிப்பு ரூ. 3.50 லட்சம் ஆகும். பயனாளிகள் தேர்வு விபரம் ஜூன் 30ல் நடக்க உள்ள கிராம சபைகளில் மக்கள் பார்வைக்கு வைத்து விவாதிக்கப்பட உள்ளது என்றனர்.