/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
/
பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
ADDED : மே 29, 2024 05:18 AM

தேனி, : மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99, உயர்நிலைப்பள்ளிகள் 36, மேல்நிலைப்பள்ளிகள் 70 என 530 பள்ளிகள் உள்ளன.
அதே போல் உதவி பெறும் பள்ளிகள் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை 216 உள்ளன.
இப்பள்ளிகளுக்கு மாநில அரசின் பாடநுால் கழகம் மூலம் தயாரிக்கப்படும் பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் தேனியில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
பள்ளி தலைமையாசிரியர்கள் புத்தகங்களை வாடகை வாகனங்கள் ஏற்பாடு செய்து பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான வாடகை மற்றும் செலவின தொகையை அரசிடம் பெற்றுக்கொள்ளலாம்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஜூன் 6 ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை மே 31க்குள் கொண்டு செல்ல பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.