/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடும் வெப்பத்திலும் படகு சவாரியில் ஆர்வம் படகு சவாரி செய்ய ஆர்வம்
/
கடும் வெப்பத்திலும் படகு சவாரியில் ஆர்வம் படகு சவாரி செய்ய ஆர்வம்
கடும் வெப்பத்திலும் படகு சவாரியில் ஆர்வம் படகு சவாரி செய்ய ஆர்வம்
கடும் வெப்பத்திலும் படகு சவாரியில் ஆர்வம் படகு சவாரி செய்ய ஆர்வம்
ADDED : மே 01, 2024 01:46 AM

கூடலுார்:கடுமையான வெப்பத்திலும் நேற்று கேரள மாநிலம் தேக்கடியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர்.
கடந்த 4 மாதங்களாக தேக்கடி வனப்பகுதியில் மழை பதிவாகவில்லை. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டமும் 115 அடியாக குறைந்தது. அப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் 4 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்.19, கேரளாவில் ஏப். 26ல் லோக்சபா தேர்தல் முடிந்தது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை கண்டு ரசிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்தம் தரும். அதன்படி வெப்பத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வந்த யானை, மான்கள், காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை கண்டு ரசித்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண், பருந்தும்பாறை, பாஞ்சாலி மேடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாகவே உள்ளது.