/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
/
மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
ADDED : ஆக 10, 2024 06:40 AM
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மையியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
'நுண்ணறிவு கருவிகளுடன் ஆராய்ச்சி நுட்பங்களில் புரட்சியை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. 'ஆராய்ச்சி சிக்கல்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான தலைப்பை எவ்வாறு தேர்வு செய்வது' என்ற தலைப்பில் பேராசிரியர் கருணாகரன் பேசினார். 'ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு கருவிகள்' என்ற தலைப்பில் திண்டுக்கல் கல்லூரி முதல்வர் பினித்முத்துக் கிருஷ்ணன் பேசினார். வணிகவியல் துறை தலைவர் சுசிலா, வணிக மேலாண்மையியல் துறை இணை பேராசிரியர் சமந்தா, ஆலோசனை குழு உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.