/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனூர் கொலையில் ஒருவரிடம் விசாரணை
/
சின்னமனூர் கொலையில் ஒருவரிடம் விசாரணை
ADDED : செப் 07, 2024 06:49 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே வனப்பகுதியில் கொலையானவர் வீரபாண்டி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்தவர் என அடையாளம் தெரிந்தது. கள்ளக் காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளதாக ஒருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னமனூர் அருகே குச்சனூரிலிருந்து சங்கராபுரம் செல்லும் ரோட்டின் வடக்கு பகுதி ரிசர்வ் பாரஸ்ட் பகுதியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வனக் காப்பாளர் சங்கிலி ராஜா 35 , ரோந்து சென்றுள்ளார். அப்போது வனப்பகுதிக்குள் கைலி,பனியன் அணிந்து 40வயது மதிக்க தக்க ஆண் சடலம் கத்தி குத்து காயங்களுடன் கிடந்தது. இறந்து கிடந்தவரின் கழுத்தை கத்தி குத்து காயங்களும், நெற்றியிலும் காயங்கள் இருந்தது. வனக் காப்பாளர் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார். எஸ்.பி. சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
எஸ்.ஐ சுல்தான் பாட்சா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் வீரபாண்டி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த சென்றாயன் 39, என்பதும், இவரது மனைவி பூங்கொடி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த பிரச்னையில் இவர் கொலை செய்யப் பட்டுள்ளார். இது தொடர்பாக மாணிக்காபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி பூங்கொடி மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த ஒரே நாளில் போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.