/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூஜாரிக்கு மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
/
பூஜாரிக்கு மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே ராசிங்காபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜன் 60. இவர் அங்கு உள்ள திருமூலம்மாள் கோயிலில் பரம்பரை பூஜாரியாக உள்ளார். கோயில் நகைகளை அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் முத்து மற்றும் இருவர் சேர்ந்து அடமானம் வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ராஜன் போடி தாலுாகா போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்து, ராஜனை தாகாத வார்த்தையால் பேசியதோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
போடி தாலுாகா போலீசார் முத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.