/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்
/
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்
ADDED : செப் 10, 2024 06:06 AM
தேனி: வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் கடமலை மயிலாடும்பாறை வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தை மேம்படுத்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்க துறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்த, பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வட்டாரங்களை 3ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் தேனி மாவட்டத்தில் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உதாரணாமாக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குதல், குழந்தைகள் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வேளாண் துறை மூலம் விவசாயத்திற்கான திட்டம், சுகாதாரத்துறை மூலம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதி கிடைக்க செய்தல், சுயதொழில் மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு இந்த திட்டத்திற்காக மயிலாடும்பாறை வட்டாரத்திற்கு ரூ. 1.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அரசு துறைகள் சுகாதாரம், வேளாண், பொருளாதாரம் மேம்படுத்துதல், திறன் வளர்த்தல், சமூக நல பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி என ஏழு பிரிவுகள் அரசு துறைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்துறைகள் மூலம் வட்டாரத்தை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

