/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகர் பகுதியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை
/
தேனி நகர் பகுதியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை
தேனி நகர் பகுதியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை
தேனி நகர் பகுதியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை
ADDED : மே 09, 2024 06:05 AM

தேனி: தேனி, வீரபாண்டி பகுதிகளில் நேற்று இரவு 8:00 மணியளவில் மழை கொட்டி தீர்த்தது.தேனி நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வந்தது.
சில நாட்களாக மாலை நேரத்தில் மழை வருவது போல் மேக மூட்டம் காணப்பட்டாலும் மழை வராமல் இருந்தது. இதனால் பகலில் வெயிலும், இரவில் வெட்கையால் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7:30 மணிக்கு சாரல் மழை துவங்கியது. இரவு 8:00 மணிக்கு மேல் மின்னலுடன் கனமழை பெய்தது. 40 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில் நகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக நகரில் 45 நிமிடங்களுக்கு மேல் மின்சாரம் தடை செய்யப்பட்டது. வேலை முடித்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடி சென்றனர். சில இடங்களில் மழைநீருடன் கழிவு கலந்து ரோட்டில் சென்றது. வீரபாண்டி பகுதியிலும் மழை பெய்தது. தற்காலிக கடைகள், செட்களில் பக்தர்கள் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.