/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செப்.,2ல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிட முடிவு
/
செப்.,2ல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிட முடிவு
செப்.,2ல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிட முடிவு
செப்.,2ல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிட முடிவு
ADDED : ஆக 31, 2024 06:30 AM
தேனி : மாவட்டத்தில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் செப்.,2ல் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.
மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. தற்போது வாக்காளர் சரிபார்ப்பு பணி வீடுகள் வாரியாக நடந்து வருகிறது. 1500 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதற்காக பணிகள் துவங்க உள்ளன.
இதற்காக வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை செப்.,2ல் கலெக்டர் ஷஜீவனா வெளியிடுகிறார். அன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.