/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜெ., பிறந்தநாள் விழா ரத்த தான முகாம்
/
ஜெ., பிறந்தநாள் விழா ரத்த தான முகாம்
ADDED : பிப் 23, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க., நகர் கழகம், தேனி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர், நகர செயலாளர் அருண்குமார், அம்மா பேரவை செயலாளர் கரிகாலன், மாநில இணைச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் ரத்த தானம் செய்து முகாமை துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளர் சோலைராஜ், நகர துணைச் செயலாளர் பாலைராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.