/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜெ., படத்தை வைத்து தினகரன் ஓட்டு கேட்கலாமா: கம்பத்தில் கனிமொழி எம்.பி., சாடல்
/
ஜெ., படத்தை வைத்து தினகரன் ஓட்டு கேட்கலாமா: கம்பத்தில் கனிமொழி எம்.பி., சாடல்
ஜெ., படத்தை வைத்து தினகரன் ஓட்டு கேட்கலாமா: கம்பத்தில் கனிமொழி எம்.பி., சாடல்
ஜெ., படத்தை வைத்து தினகரன் ஓட்டு கேட்கலாமா: கம்பத்தில் கனிமொழி எம்.பி., சாடல்
ADDED : ஏப் 04, 2024 11:44 PM
கம்பம் : பா.ஜ.வுடன் இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிய ஜெ., படத்தை போட்டு தினகரன் ஒட்டு கேட்பது சரியா என கம்பத்தில் கனிமொழி எம்.பி., பேசினார்.
தேனி தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து கம்பத்தில் நேற்று மாலை கனிமொழி பேசியதாவது : தமிழகம் பக்கமே தலைவைத்து படுக்காத பிரதமர் தேர்தல் என்றவுடன் அடிக்கடி வருகிறார். அவருக்கு தமிழ் மீது திடீர் பாசம். தமிழ் மொழியை படிக்க போகிறேன் என்கிறார். எங்களை இந்தியை படி படி என்று இத்தனை நாட்களும் கூறினீர்கள்.
நீங்கள் இப்போது தமிழ் படியுங்கள். நல்ல தமிழ் ஆசிரியரை முதல்வர் அனுப்பி வைப்பார்.
புயல் வெள்ள நிவாரண நிதி, நிதி பகிர்வு என அனைத்திலும் நம்மை புறக்கணிக்கின்றனர். நேரடி வரிகள் மூலம் 6.24 லட்சம் கோடி மத்திய அரசிற்கு தருகிறோம். ஆனால் அவர்கள் 2.47 லட்சம் கோடி மட்டுமே தருகின்றனர். உத்தரப் பிரதேசத்திற்கு 10 மடங்கு அதிகம் நிதி தரப்படுகிறது.
இ.டி. ஐ.டி. சி.பி.ஐ.,வைத்து மிரட்டி ஆட்சி நடத்துகின்றனர். ஒன்று அவர்கள் கட்சியில் சேர வேண்டும். அல்லது கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு போடுவார்கள். அவர்கள் கட்சியில் சேர்ந்த 25 பேர்களின் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளார். அவர் மீது 2 வழக்குகள் உள்ளது.
பா.ஜ. வுடன் கூட்டணி வைத்தது நான் செய்த பெரிய தவறு இனி வாழ்க்கையில் எப்போதும் பா.ஜ. வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். அப்படிப்பட்டவர் படத்தை வைத்து தினகரன் ஒட்டு கேட்கிறார்.

