/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேயிலை தோட்டங்களை வசீகரிக்கும்' ஜெக்ராந்தா'
/
தேயிலை தோட்டங்களை வசீகரிக்கும்' ஜெக்ராந்தா'
ADDED : மார் 25, 2024 05:38 AM

மூணாறு : மூணாறில் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு அழகு சேர்க்கும் வகையில் நீல வண்ணத்தில் 'ஜெக்ராந்தா' பூத்துள்ளது.
இங்குள்ள கால நிலைக்கு ஏற்ப பல்வேறு பூக்கள் பூக்கும் என்றபோதும் ஆண்டு தோறும் குளிர் காலத்தில் மட்டும் பூக்கும் 'ஜெக்ராந்தா' பூக்கள் அனைவரையும் வசீகரிக்கும்.
அதற்கு காரணம் மரங்களில் இலைகள் இன்றி நீல வண்ணத்தில் பூக்கள் மட்டும் காணப்படும் என்பதால் எளிதாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த இந்த பூக்களின் மரக்கன்றுகளை ஆரம்ப காலத்தில் தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்த பிரிட்டிஷார் அழகுக்கு கொண்டு வந்து நட்டனர். அவற்றில் ஏராளம் அழிந்து விட்ட நிலையில் எஞ்சியவை பள்ளிவாசல், வாகுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் உள்ளன.
அவை பிப்ரவரியில் பூக்க துவங்கி ஏப்ரல் வரை பூக்கள் காணப்படும். தற்போது பசுமையாக தேயிலைத் தோட்டங்களுக்கு அழகு சேர்க்கும் வகையில் நீல வண்ணத்தில் ஜெக்ராந்தா பூக்கள் பூத்துள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

