/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அணையில் நீர் திறப்பிற்கு விவசாய பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் அதிருப்தி

ADDED : ஜூன் 02, 2024 04:07 AM
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகளை அனுமதிக்காத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. நேற்று காலை முதல் போகத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தண்ணீர் திறப்பிற்கு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டது.
இது குறித்து கம்பம் பள்ளத்தாக்கு சங்கத்தின் தலைவர் தர்வேஷ் முகைதீன், செயலாளர் சகுபர் அலி, விவசாயிகள் சங்க தலைவர் ஒ.ஆர்.நாராயணன் ( கம்பம் ), ராஜா ( சின்னமனுார் ) ஆகியோர் கூறியதாவது :
50 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் திறக்கும் நிகழ்வில் முக்கிய பிரமுகர்களுடன் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்பது நடைமுறை. தண்ணீர் திறப்பின் போது மும்மத பிரார்த்தனை, பூஜைகள் செய்வது வாடிக்கையாகும்.
இந்தாண்டு தேர்தல் நடத்தை விதி முறையை சுட்டிக்காட்டி, மே 31 இரவு 9 மணிக்கு விவசாய சங்க நிர்வாகிகள் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம். ஏற்பாடுகளை வழக்கம் போல செய்யுங்கள் என பொதுப்பணித் துறை கூறியதால், பூஜை பொருள்கள், அர்ச்சகர் போன்றவற்றை சின்னமனூர் விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தை சாராத ஒரு சிலரை அழைத்து பூஜை செய்து தண்ணீர் திறந்தது கண்டனத்திற்குரியது.
இது ஏற்புடையதல்ல. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.