/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 18, 2024 05:53 AM
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
புராதானமும், சிறப்பும் கொண்டது கம்பம் கவுமாரியம்மன் கோயில். மாவட்டத்தில் சுயம்புவாக அம்மன் எழுந்தருளிய கோயில்களில் இது பிரதானமானது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்தாண்டு திருவிழாவிற்கான சாட்டுதல் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை கம்ப ராயப்பெருமாள் கோயிலில் இருந்த உற்சவர், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர்
முக்கொம்பு ஊர்வலமாக நகர் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு, கோயிலில் உள்ள கம்பத்தில் இணைத்து கட்டப்பட்டது. புது வஸ்திரம் உடுத்தி மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவில் மே 1 ல் கம்பம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியும், ஹிந்து சமய அறநிலைய துறையும் செய்து வருகிறது.

