/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காந்தலுார் சுற்றுலா விழா நாளை துவக்கம்; லோகோ வெளியீடு
/
காந்தலுார் சுற்றுலா விழா நாளை துவக்கம்; லோகோ வெளியீடு
காந்தலுார் சுற்றுலா விழா நாளை துவக்கம்; லோகோ வெளியீடு
காந்தலுார் சுற்றுலா விழா நாளை துவக்கம்; லோகோ வெளியீடு
ADDED : மே 06, 2024 12:41 AM
மூணாறு : இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே காந்தலுாரில் நாளை (மே 7) முதல் மே 12 வரை நடக்கும் சுற்றுலா விழாவுக்கு 'லோகோ' வெளியிடப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தின் கடைகோடியில் மறையூர் அருகே காந்தலுார் ஊராட்சி உள்ளது.
இங்கு காய்கறி, பழங்கள் சாகுபடி முக்கிய தொழிலாகும். அவற்றை கொண்டு தெரு சுற்றுலா திட்டத்தை காந்தலுார் ஊராட்சி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இச்செயலுக்காக கடந்தாண்டு மத்திய அரசிடம் தங்க விருது பெற்றது.
இந்நிலையில் இரண்டாம் ஆண்டு காந்தலுார் சுற்றுலா விழா நாளை துவங்கி மே 12 வரை நடக்கிறது. காந்தலுார் ஊராட்சி, ரிசார்ட், ஹோம் ஸ்டே சங்கம், டிரைவர்கள் சங்கம் சார்பில் இவ்விழா நடக்கிறது. அதனை முன்னிட்டு மறையூர், சின்னார், மூணாறு பகுதிகளில் இருந்து சிறப்பு சுற்றுலா தொகுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
காந்தலூரில் பல்வேறு சுற்றுலா பகுதிகள், பழங்கால குகை ஓவியங்கள், முனியறை, நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றுடன் சிறப்பு அந்தஸ்து பெற்ற மறையூர் வெல்லம், காந்தலூர், வட்டவடை மலைப்பூண்டு, குளிர் கால காய்கறி சாகுபடி, ஆப்பிள், ஸ்டாபெரி பழத்தோட்டங்கள், மசாலா பொருட்கள் விளையும் தோட்டங்கள் ஆகியவற்றையும் ரசிக்கலாம்.
பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெளியீடு
இச்சுற்றுலா விழாவையொட்டி ' லோகோ' வை மலையாள நடிகர் ரஞ்சி பணிக்கர் வெளியிட்டார்.