/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லை பெரியாறு உபரிநீர் கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்படும் ஆண்டிபட்டியில் கனிமொழி எம்.பி., பிரசாரம்

ADDED : ஏப் 06, 2024 04:23 AM
ஆண்டிபட்டி: முல்லைப் பெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றி தரப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஆண்டிபட்டியில் கனிமொழி எம்.பி., பேசினார்.
தேனி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றி சுற்றி வந்து ஓட்டு கேட்கிறார். மோடி இனி ஆட்சிக்கு வரமாட்டார். ஆட்சிக்கு வந்தாலும் என்ன நல்லது செய்யப் போகிறார். மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி ஏதாவது நிறைவேற்றி உள்ளாரா.
தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை என்பதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிந்து வரவில்லை. கஷ்டப்படும் மக்களுக்கு அடிப்படை சம்பளம் கிடைக்க காங்., உருவாக்கிய நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்குகின்றனர்.
விவசாயத்தில் அவர்களுக்கு அக்கறை இல்லை. விளைபொருள்களுக்கான ஆதார விலை கிடைக்க வழி இல்லை. கவர்னர் பதவி இல்லாமல் செய்ய வேண்டும்.
கவர்னரும் சட்டத்திற்கு உட்பட்டவர் என்ற நிலை வர வேண்டும். ஆளுநர் உரையை படிக்காமல் செல்லும் கவர்னருக்கு சம்பளம், பாதுகாப்பு ஏன் தர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உபரி நீரை இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி பகுதிக்கு கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றி தரப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.