/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜூலை 12ல் நடத்த ஏற்பாடு

ADDED : ஜூன் 08, 2024 05:48 AM
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12 ல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை மற்றும் 18 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
800 ஆண்டுகளைக் கடந்த இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் முடிந்து கடந்த பல மாதங்களாக கோயிலில் நன்கொடையாளர்கள் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலில் கோபுரம் சீரமைப்பு மற்றும் பெயிண்டிங், கோயில் கருவறை பராமரிப்பு, சுற்றுப்புறத்தில் தளம் பதித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உட்பட பல பணிகள் தொடர்கிறது. கோயில் முன்புறத்தில் சிதிலமடைந்திருந்த தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு தெப்பத்தில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துவங்கியுள்ளது. கும்பாபிஷேக திட்டமிட்டல் குறித்து 18 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஹிந்து அறநிலையத்துறையுடன் ஆலோசித்து வருகின்றனர்.