/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி கால்நடை கல்லுாரியில் கோம்பை நாய் கருத்தரங்கு
/
தேனி கால்நடை கல்லுாரியில் கோம்பை நாய் கருத்தரங்கு
ADDED : மார் 06, 2025 01:43 AM
தேனி:'தேனி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் வரும் 18ல் கோம்பை நாய் மரபியல் வள பாதுகாப்பு மண்டல கருத்தரங்கு, அயலினம், நாட்டு இன நாய்களின் கண்காட்சி நடக்க உள்ளது,'' என, மரபியல் இன விருத்தி துறை தலைவர் செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கோம்பை நாயினம் தேனி மாவட்டத்தின் பாரம்பரிய இனமாகும். இதன் மரபியல் வள பாதுகாப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மார்ச் 18ல் கருத்தரங்கு, கண்காட்சி நடக்க உள்ளது.
இதில் வெளிநாட்டு நாய் இனங்கள், உள்நாட்டு பூர்வீக இனங்களான கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை நாயினங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.