/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
/
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 01, 2024 06:07 AM
மூணாறு : மூணாறு ஊராட்சி சார்பில் வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழாவும், கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகளின் திறப்பு விழாவும் நடந்தது.
கேரளா, வயநாட்டில் ஜூலை 30 ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அங்கு மீட்பு பணிகளுக்கு மூணாறைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு தாமாக முன் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு மூணாறு ஊராட்சி சார்பில் பாராட்டு விழாவும், கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகளின் திறப்பு விழாவும் நடந்தது. ஊராட்சி தலைவர் தீபா தலைமை வகித்தார். இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி, இருக்கைகளை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.மணி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜிஷா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜாக்குலின்மேரி, காங்கிரஸ் மூணாறு மண்டல தலைவர் நெல்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.