/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிர்வாகிகளுக்கு வந்து சேராத 'கவனிப்பு'அ.தி.மு.க.,வில் எதிரொலிக்கும் புலம்பல்
/
நிர்வாகிகளுக்கு வந்து சேராத 'கவனிப்பு'அ.தி.மு.க.,வில் எதிரொலிக்கும் புலம்பல்
நிர்வாகிகளுக்கு வந்து சேராத 'கவனிப்பு'அ.தி.மு.க.,வில் எதிரொலிக்கும் புலம்பல்
நிர்வாகிகளுக்கு வந்து சேராத 'கவனிப்பு'அ.தி.மு.க.,வில் எதிரொலிக்கும் புலம்பல்
ADDED : ஏப் 12, 2024 06:11 AM
சின்னமனூர்: வேட்பாளரின் கவனிப்பு, வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டியினருக்கு உரிய முறையில் சேரவில்லை என அ.தி.மு.க., வினர் புலம்புகின்றனர்.
தேனி லோக்சபா தொகுதியில் பிரசாரம் முழு வீச்சில் நடக்கிறது. பூத் கமிட்டி, வார்டு நிர்வாகிகளே களப்பணியாளர்கள். அவர்களின் பணியே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே எல்லா கட்சிகளிலும் வார்டு நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை கவனிப்பதில் தனி கவனம் செலுத்துவார்கள். வார்டுகளில் ஐந்து முறை வீடு வீடாக கேன்வாஸ் செய்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து பல முறை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒரிரு முறை மட்டுமே பூத் கமிட்டிக்கு கிடைத்துள்ளதாகவும் புலம்புகின்றனர். இந்த புலம்பல் தேர்தல் பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் நெருங்கியவர்களிடம் இது பற்றி சில அ.தி.மு.க. வினர் புகார் கூறியுள்ளனர்.
தேனி தொகுதிக்கு பொறுப்பேற்றுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், தேர்தல் பணிகளில் கெட்டிக்காரர். எனவே தான் கடந்த லோக்சபா தேர்தலில் தனது மகன் வெற்றிக்காக உதயகுமாரை தேனி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக ஓ.பி.எஸ். நியமித்தார். அதே பாணியில் இந்த தேர்தலிலும் உதயகுமார், - தேனிக்கு பொறுப்பாளராக உள்ளார். ஆனால் இது போன்று அல்வா கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதன் பலன் தேர்தலில் எதிரொலிக்கும். எனவே அ.திமு.க. வில் இந்த அல்வா கொடுக்கும் விஷயங்களை தடுத்து, பூத் கமிட்டியினரை உற்சாகப்படுத்தினால் தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் என்கின்றனர் வார்டு செயலாளர்கள்.

