/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விழிப்புணர்வு இல்லை n ஆன்லைனில் வரி செலுத்தும் திட்டம் பற்றிய n மீண்டும் ஊராட்சிகளில் பணம் செலுத்தும் நிலை

ADDED : ஆக 22, 2024 03:24 AM
கம்பம்: ஊராட்சிகளில் வரி இனங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்பதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் மீண்டும் ஊராட்சி அலுவலங்களுக்கு நேரில் சென்று பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணைய வழி வரி வசூல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தை ஊராட்சிகளில் கடந்த 2022 நவ. 24 முதல் அமல்படுத்தியது. மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சியும், டிசம்பர் முதல் தேதி முதல் வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சியும், டிச. 15 முதல் அனைத்து ஊராட்சிகளிலும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்றிட வேண்டும் என்றும், நேரடியாக வசூலிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் திட்டம் நடைமுறைப்படுத்தி 20 மாதங்களை கடந்தும் இதுவரை ஆன்லைன் வரி வசூல் 100 சதவீதம் சாத்தியப் படவில்லை.
அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆன்லைனில் வரி செலுத்த இ சேவை மையங்களுக்கோ அல்லது தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்றால் கட்டணமாக ரூ.10 முதல் 20 வரை வசூலிக்கின்றனர். மேலும் எல்லோரிடமும் ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது இல்லை. எனவே பணத்துடன் ஊராட்சி அலுவலகம் சென்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில், இ சேவை மையங்களுக்கு சென்றால் ஆன்லைனில் வரி செலுத்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே பெரும்பாலானவர்கள் ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணம் செலுத்தும் பழைய முறையை தான் பின்பற்றுகின்றனர்.
ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால், நாங்கள் வாங்கி 'ஸ்வைப்' செய்து கட்டணம் செலுத்தி வருகின்றோம் என்கின்றனர். ஊராட்சிகளில் ஆன்லைனில் வரி செலுத்தும் நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.