/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க கெடுபிடி அச்சக உரிமையாளர்கள் புலம்பல்
/
போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க கெடுபிடி அச்சக உரிமையாளர்கள் புலம்பல்
போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க கெடுபிடி அச்சக உரிமையாளர்கள் புலம்பல்
போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க கெடுபிடி அச்சக உரிமையாளர்கள் புலம்பல்
ADDED : மார் 23, 2024 06:11 AM
கம்பம்: தேர்தல் அறிவிப்பால் போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக அச்சக உரிமையாளர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் அச்சகங்களில் பிளக்ஸ், போஸ்டர், துண்டு பிரசுரம் அச்சடிப்பது அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது எது அச்சடித்தாலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அதிலும் பிளக்ஸ், போஸ்டர் அச்சடிக்க அனுமதி இல்லை. துண்டு பிரசுரம் மட்டும் அச்சடிக்கலாம் அதற்கும் அனுமதி பெற வேண்டும் என அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆனால் கேரளாவில் பிளக்ஸ், போஸ்டர், நோட்டீஸ் என அனைத்திற்கும் அனுமதி உள்ளது. பிளக்ஸ் மட்டும் துணியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கெடுபிடிகள் கேரளாவில் இல்லை என அச்சக உரிமையாளர்கள் புலம்புகின்றனர். தேர்தல் வந்தால் தங்களுக்கு வருவாயும் குறையும், தேவையிலாத விசாரணைகள் வருகிறது.
இது தொடர்பாக கம்பம் சட்டசபை தொகுதி - உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் தாட்சாயினி கூறுகையில், அச்சக உரிமையாளர்களை அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி விதிமுறைகள் பற்றி . அச்சக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தப்பட்ட விபரம் அச்சடிக்கும் போது கவனமாக இருக்ககேட்டுக் கொண்டுள்ளோம். ஒவ்வொருபோஸ்டர், துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது அவசியம், என்றார்.

