/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்களுடன் முதல்வர் முகாமில் கூடுதல் செலவால் புலம்பல் ; தவிர்க்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தவிப்பு
/
மக்களுடன் முதல்வர் முகாமில் கூடுதல் செலவால் புலம்பல் ; தவிர்க்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தவிப்பு
மக்களுடன் முதல்வர் முகாமில் கூடுதல் செலவால் புலம்பல் ; தவிர்க்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தவிப்பு
மக்களுடன் முதல்வர் முகாமில் கூடுதல் செலவால் புலம்பல் ; தவிர்க்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தவிப்பு
ADDED : ஆக 07, 2024 05:41 AM
மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் ஜூலை 17 முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள 4,5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் வருவாய்த்துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் மனுக்கள் பெற்று கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டுகிறது. அரசு அலுவலர்கள் 300 பேர் பங்கேற்கின்றனர்.
130 ஊராட்சிகளில் இதுவரை 83 ஊராட்சிகளில் முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் 13,500க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.
இம் முகாமிற்கு ஒரு ஊராட்சிக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் நிதி அரசு ஒதுக்குகிறது. ஆனால் ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது. இதையறிந்து பி.டி.ஓ.,க்கள், வருவாய் துறை அதிகாரிகள் முகாம் நடத்த உள்ள 'பசையுள்ள' ஊராட்சி தலைவர்களிடம் நீண்ட பட்டியலை வழங்கி,'உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தும் முகாம். எனவே, சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும்' என கூறி செலவு முழுவதையும் ஊராட்சி தலைவர்களிடம் சுமத்துகின்றனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர், செயலர்கள் கூறுகையில், முகாமில் ஷாமியான பந்தல், இணைய தளவசதிக்கு ரூபாய் பல ஆயிரம், டீ, ஸ்நாக்ஸ், மதிய உணவு என சுமார் ஒன்னரை லட்சம் செலவிட வேண்டியுள்ளது. முகாமில் கூட்டம் அதிகரித்து காட்ட கிராமங்களில் இருந்து முகாம் நடக்கும் இடத்திற்கு வாகனங்களில் மனு வழங்குவோரை அழைத்து வந்து திரும்ப வீட்டில் விட வேண்டும். வாகன செலவு பல ஆயிரம் தாண்டுகிறது. இந்த சூழலில் செய்தியாளர்கள் என கூறி சிலர் கும்பலாக வந்து அதிகாரிகளை பணம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
வேறு வழியில்லாமல் அதிகாரிகள் ஊராட்சி தலைவர்களை கைகாட்டி ஒதுங்குகின்றனர். இதுபோன்ற சூழலால் முகாம் என்றாலே தலைவர்கள் ஓடி ஒளியும் மனநிலைக்கு வந்து விட்டதாகவும், ஆடம்பர செலவுகளை குறைத்து அரசு கட்டடங்கள், சமுதாய கூடங்களில் நடத்தினால் வீண் செலவு தவிர்க்கலாம் என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், ' இணைதள வசதிக்கு அரசு தனியாக ரூ.10ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்துங்கள், சொந்த செலவில் அழைத்து வர வேண்டாம் என ஊராட்சி தலைவர்களை அறிவுறுத்துகிறோம். முகாமில் வழங்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றனர்.