/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு அபாயம்: விபத்துக்கு முன் தடுக்கப்படுமா
/
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு அபாயம்: விபத்துக்கு முன் தடுக்கப்படுமா
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு அபாயம்: விபத்துக்கு முன் தடுக்கப்படுமா
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு அபாயம்: விபத்துக்கு முன் தடுக்கப்படுமா
ADDED : ஜூன் 26, 2024 07:58 AM

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் விபத்து ஏற்படுவதற்கு முன் சீரமைப்பு பணிகள் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை முன் வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமுளி மலைப்பாதை தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளை கொண்டதாகும். மாதா கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கும்.
2018ல் பெய்த கனமழையின் போது பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் போக்குவரத்து தடை இருந்தது. அதன் பின் மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து கற்களால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டன. மேலும் தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டன.
இருப்பினும் தற்போது பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
இரைச்சல் பாலம் அருகே பாறை சரிந்து விழும் நிலையில் உள்ளது. பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே பல மரங்கள் ரோட்டின் குறுக்கே விழும் நிலையில் உள்ளது.
தமிழக கேரள எல்லையாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில் விபத்து அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்கூட்டியே இது போன்ற இடங்களை கண்டறிந்து சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும்.