/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
ADDED : செப் 01, 2024 05:55 AM
தேனி, : தமிழகத்தில் புதிதாக 200 நடமாடும் கால்நடை மருத்துவசேவை வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தேனி மாவட்டத்திற்கு 3 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதில் இரு வாகனங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை கலெக்டர் ஷஜீவனா பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். ஒரு வாகனம் ஆண்டிபட்டி, கடமலையிலை ஒன்றியத்திலும், மற்றொன்று சின்னமனுார், உத்தமபாளையம், போடி, கம்பம் பகுதிகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனமும் தினந்தோறும் 3 கிராமங்களில் சேவை வழங்க உள்ளன.
இதில் அவசரகால மருத்துவ சேவைகள், தொழில்நுட்ப ஆலோசனை, சிறப்பு தடுப்பூசிப் செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.