ADDED : செப் 22, 2024 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : கூடலுாரில் தெரு நாய் கடித்து 4 வயது சிறுமி காயம் அடைந்தார். தெருக்களில் பயமுறுத்தும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் மனு வழங்கினர்.
கூடலுார் காந்திகிராமத்தில் நேற்று 4 வயது சிறுமியை தெரு நாய் கடித்ததில் கை மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே அப்பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் மேலும் பல குழந்தைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டுமென அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.