/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராமங்களில் உள்ளூர் நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் தீவிரம்
/
கிராமங்களில் உள்ளூர் நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் தீவிரம்
கிராமங்களில் உள்ளூர் நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் தீவிரம்
கிராமங்களில் உள்ளூர் நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் தீவிரம்
ADDED : ஏப் 11, 2024 06:35 AM
ஆண்டிபட்டி : தேனி லோக்சபா தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க.,வினரிடையே மும்முனை போட்டி வேகம் எடுத்துள்ளது. அந்தந்த கட்சி சார்ந்த வேட்பாளர்கள் பல்வேறு கிராமங்களில் முதல் ரவுண்டு தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளனர்.
ஓட்டுப் பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் வி.ஐ.பி., கள் தொகுதியில் முக்கிய இடங்களை மட்டுமே மையப்படுத்தி பிரசாரம் செய்து செல்கின்றனர்.
வேட்பாளர்களும் ஏற்கனவே சென்று வந்த பகுதிகளுக்கு அடுத்தடுத்து செல்லும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இதனால் அந்தந்த கட்சி உள்ளூர் நிர்வாகிகள் தங்கள் கிராமங்களில் காலை, மாலையில் ஆதரவான வாக்காளர்களை தினமும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி தெருத்தெருவாக கிராமங்களில் கோஷமிட்டு செல்கின்றனர்.
சில கிராமங்களில் அந்தந்த கட்சி நிர்வாகிகளின் பிரசாரத்தை பார்த்து உற்சாகமடையும் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து குஷியாக ஓட்டுக்கேட்டு செல்கின்றனர்.

