ADDED : ஜூன் 27, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பத்மசாலியார் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 63. திருவண்ணாமலையில் தொழில் செய்து வரும் இவரது மகன் ஆனந்த் 35.
வீட்டிற்கு பிரபாகரன் தனது மனைவியுடன் ஜூன் 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று முன்தினம் (ஜூன் 25) வடுகபட்டிக்கு வந்தபோது வீட்டின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க டாலர் செயின், ஒரு பவுன் பேபி செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.பத்தாயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த தெருவில் சி.சி.டி.வி., கேமரா பதிவில் குற்றவாளிகள் முகம் பதிந்துள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.--