/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோக்அதாலத்: 1021 வழக்குகளில் ரூ.64.06 கோடிக்கு தீர்வு
/
லோக்அதாலத்: 1021 வழக்குகளில் ரூ.64.06 கோடிக்கு தீர்வு
லோக்அதாலத்: 1021 வழக்குகளில் ரூ.64.06 கோடிக்கு தீர்வு
லோக்அதாலத்: 1021 வழக்குகளில் ரூ.64.06 கோடிக்கு தீர்வு
ADDED : மார் 09, 2025 03:49 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த லோக்அதாலத்தில் 1021 வழக்குகளில் ரூ. 64.06 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு இன்சுரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.74 லட்சம் பெற்றுத்தரப்பட்டது.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக்அதாலத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட சார்பு நீதிபதி பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். அமர்வு நீதிபதிகள் அனுராதா, கணேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார், சார்பு நீதிபதி கீதா, நீதித்துறை நடுவர் ஜெயமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியகுளத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சமீனா, சார்பு நீதிபதிசந்திரசேகர், நீதித்துறை நடுவர் கமலநாதன் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், நீதித்துறை நடுவர் ராமநாதன் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் ரமேஸ் முன்னிலை வகித்தனர். போடியில் சார்பு நீதிபதி சையதுசுலைமான் உசேன், நீதித்துறை நடுவர் பழனிவேல்ராஜன் பங்கேற்றனர்.
பணிமுடித்து வீடு திரும்பும் போது விபத்தில் போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் பலியானர். இந்த வழக்கில் குடும்பத்தினருக்கு இன்சுரன்ஸ் நிறுவனம் மூலம் ரூ.74 லட்சம் பெற்றுத்தரப்பட்டது.
இந்த வழக்கு உட்பட மாவட்டத்தில் 1021 வழக்குகளுக்கு ரூ. 64கோடியே 6லட்சத்து 39ஆயிரத்து 366க்கு தீர்வு காணப்பட்டது.