ADDED : ஜூலை 09, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தர்மபுரி மாவட்டம் வெள்ளேகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நசீர் பாஷா 60, என்.டி.சி., நிறுவனத்தில் லாரி டிரைவராக இருந்து வந்தார்.
நேற்று முன் தினம் ஆண்டிபட்டி க.விலக்கு அருகே தனியார் பெட்ரோல் பல்கில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது தேனியில் இருந்து வந்த இருசக்கர வாகனம் நசீர் பாஷா மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
நசீர் பாஷா மனைவி குல்ஜார் புகாரில் க.விலக்கு போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்ற சூர்யதேவன் 28, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்