/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மல்லிங்காபுரம் பாதையில் பாலம், ரோடு இன்றி சிரமம்
/
மல்லிங்காபுரம் பாதையில் பாலம், ரோடு இன்றி சிரமம்
ADDED : ஜூலை 06, 2024 05:48 AM

போடி : போடி அருகே சிலமலையில் இருந்து ராசிங்காபுரம் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ளது மல்லிங்காபுரம். மாற்றுப் பாதையாக சிலமலையில் இருந்து குறுக்குப் பாதை வழியாக ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ளது மல்லிங்காபுரம்.
இப்பாதை வழியாக செல்வதன் மூலம் ஒன்றரை கி.மீ., தூரம் சுற்றுச் செல்வது தவிர்க்கப்படுகிறது. சிலமலையில் இருந்து மல்லிங்காபுரத்திற்கு குறிப்பிட்ட தூரம் மட்டுமே ரோடு வசதி உள்ளது.
அதன் பின் ரோடு, ஓடை பகுதியில் பாலம் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவும், பள்ளி மாணவர்கள் சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வரவும் முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் வரும் போது மக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சிலமலை - மல்லிங்காபுரம் இணைப்பு பாதையில் ரோடு, பாலம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி சிலமலை - மல்லிங்காபுரத்திற்கு ரோடு, பாலம் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.