ADDED : மார் 12, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒண்டிவீரன் கோயிலில் சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
இரு நாட்களுக்கு கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
சிலைகளை உடைத்தவர்களை கண்டறிந்து அப்பகுதியில் விசாரித்துக் கொண்டிருந்த போது ஏத்தக்கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த மாயன் என்பவர் சிலைகளை தான் உடைத்ததாக கூறியதுடன், இதுகுறித்து விசாரித்தவர்களை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஊர் நாட்டாமை ரவி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் சிலைகளை உடைத்த மாயனை கைது செய்தனர்.