/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை
/
சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை
ADDED : ஆக 18, 2024 07:14 AM
கம்பம், : சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மண்டபம் கட்ட ஒன்றியம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இருப்பது சுருளி அருவி மட்டுமேயாகும்.
மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் இங்கு வந்து, அருவியில் குளித்து ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்களினும், மகாளய அமாவாசை நாளிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே சுருளி அருவியில் ஆற்றுப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் ஒன்றை கட்ட கம்பம் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அரசிற்கு பரிந்துரை செய்து இதற்கென சிறப்பு நிதி பெற்றுத் தர வேண்டும்.

