/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
/
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 13, 2024 04:27 AM

கம்பம் : காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைத்த திருமண மண்டபம், பொதுக்கழிப்பறையை பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டி வைத்துள்ளனர்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொது கழிப்பறை பராமரிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்காமல் பூட்டி வைத்துள்ளனர். கருமாரிபுரத்தில் ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்தவீதியும் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. அணைப்பட்டி நுழைவு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு காரணம் அருகே உள்ள பாழடைந்த பள்ளி கட்டடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் இந்த அவலம். அங்கன்வாடி குழந்தைகள் துர்நாற்றத்தில் படிக்கின்றனர்.மலைக்குன்றுகளில் பெய்யும் மழைநீர் ஊரின் நடுவே ஒடும் முத்தன நாடார் ஒடை வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கும், ஆனால் அந்த ஒடை ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. பேரூராட்சி சார்பில் ஒடையின் மையத்தில் இரு இடங்களில் பொதுகழிப்பறையை கட்டி உள்ளது. ஓடையின் பக்கவாட்டில் உள்ள வீடுகளுக்குள் அடிக்கடி பாம்புகள் படையெடுக்கிறது. நகரில் அனைத்து வீதிகளிலும் பகிர்மான குழாய் பதிக்க தோண்டி குண்டும் குழியுமாக மாற்றி வைத்துள்ளனர். ஆதிதிராவிடர் காலனிக்கு பொதுக் கழிப்பறை,சாக்கடை வசதி இல்லை. குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை நள்ளிரவில் சப்ளை செய்கின்றனர். அதற்காக இரவு முழுவதும் கண் விழித்து இருந்து குடிநீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட இறைச்சி கூடம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை தெருவில் அறுத்து விற்பனை செய்கின்றனர். பேரூராட்சி திருமண மண்டபம் பலமுறை ரூபாய் பல லட்சங்களில் பராமரிப்பு செய்தும், மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டியே வைத்துள்ளனர். குடிநீர் வினியோகத்திலும் குளறுபடியால் மக்கள் சிரமம் அடைகின்றனர். பொதுமக்கள் கருத்து:
தெருவில் நடக்கும் இறுதி சடங்கு
நாகராஜ், காமயகவுண்டன்பட்டி : தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பொது மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சமுதாய மக்கள் நீர்மாலை எடுக்கும் கட்டடம் சேதமடைந்துள்ளதால் வீதியில் தான் எடுக்க வேண்டி உள்ளது. அவ்வாறு எடுக்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களுக்கான பொது கழிப்பறைகள் இல்லை. பராமரிப்பு இன்றி பல கழிப்பறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
மயானத்திற்கு பாதை வசதி தேவை
மகாலிங்கம், காமயகவுண்டன்பட்டி : காலனியில் உள்ள ஊரணியை தூர்வாரி மழைநீர் தேங்க நடவடிக்கை வேண்டும். காலனியில் சாலை வசதி, சமுதாய கூடம் அமைக்க வேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல பாதை வசதி இன்றி சிரமம் ஏற்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம் பேரூராட்சி கண்டு கொள்ளவில்லை. பகல் நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும்
இந்த பிரச்னைகள் தொடர்பாக பேரூராட்சி தலைவர் வேல்முருகனிடம் கேட்டதற்கு, ஆடு அடிக்கும் கொட்டிலை பயன்படுத்த வர மறுக்கின்றனர். திருண மண்டபம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காலனி மயானத்திற்கு பாதை உள்ளது. பராமரிக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின் கிழ் பகிர்மான குழாய் பதிப்பதால் ரோடுகள் சேதமடைந்துள்ளது. அது சரி செய்யப்படும். கிழக்கு வெளி வீதி கழிப்பறை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. தெரு நாய்களை அடைக்கும் கட்டடம் பராமரிப்பு செய்யப்படும், அங்கன்வாடி வளாகம் ஊராட்சி ஒன்றிய பள்ளியாகும். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் -