/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவூற்று வேலப்பர் கோயில் வருஷாபிஷேக விழா
/
மாவூற்று வேலப்பர் கோயில் வருஷாபிஷேக விழா
ADDED : மார் 31, 2024 04:27 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்தின் ஓராண்டு நிறைவுக்குப் பின் வருஷாபிஷேக விழா நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையான சூழலில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் சிறப்பு. சுனையில் நீராடி வேலைப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடந்தது.
ஓராண்டு நிறைவுக்கு பின் நேற்று நடந்த விழாவில் மங்கள இசை, குரு பிரார்த்தனை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹ வாசனம், வேத பாராயணம், கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுக்கு பின் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள், அன்னதானம் நடந்தது.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

