/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மயிலாடும்பாறை-மல்லப்புரம்- ரோடு சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும் மதுரை, தேனி மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
/
மயிலாடும்பாறை-மல்லப்புரம்- ரோடு சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும் மதுரை, தேனி மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
மயிலாடும்பாறை-மல்லப்புரம்- ரோடு சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும் மதுரை, தேனி மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
மயிலாடும்பாறை-மல்லப்புரம்- ரோடு சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும் மதுரை, தேனி மாவட்ட மக்கள் பயன் பெறலாம்
ADDED : மே 26, 2024 04:42 AM

கடமலைக்குண்டு: மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை --மல்லபுரம் ரோட்டை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் 14 கி.மீ., தொலைவில் உள்ளது. மயிலாடும்பாறையில் இருந்து மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி, முத்தாலம்பாறை, தாழையூத்து ஆகிய மலைக்கிராமங்களை கடந்து 4 கி.மீ., தூரம் மலைப்பாதையில் பயணித்தால் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மல்லப்புரம் சென்றுவிடலாம். பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் தற்போது இருசக்கர வாகனங்கள் தனியார் வாகனங்கள் அதிகம் சென்று திரும்புகிறது.
மழையால் சேதம் அடைந்த ரோட்டில் வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்று திரும்புகிறது. 30 ஆண்டுக்கு மேலாக இந்த ரோடு சீரமைக்க வில்லை. இந்த ரோடு வழியாக பஸ் போக்குவரத்து துவங்கினால் தேனி மாவட்டத்திலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு குறைந்த நேர பயணத்தில் எளிதில் சென்று வர முடியும். இரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை இல்லை.
விளை பொருட்களை எளிதில் சந்தை படுத்தலாம்
மணிகண்டன், மயிலாடும்பாறை : க. மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியவில்லை. மயிலாடும்பாறை - மல்லப்புரம் ரோட்டை சீரமைத்து பஸ் போக்குவரத்து துவங்கினால் விவசாயிகள், வியாபாரிகள் பொருட்களை உசிலம்பட்டி, பேரையூர், கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் எளிதில் சந்தைப்படுத்த முடியும். அப்பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் தேனி மாவட்டத்திற்கு எளிதில் சென்று வர முடியும்.
ரோடு சீரமைக்க வேண்டும்
மலைச்சாமி, வியாபாரி, மயிலாடும்பறை : மயிலாடும்பாறையில் இருந்து பேரையூருக்கு மலைப்பாதை வழியாக சென்றால் 50 கி.மீ., தூரத்தில் சென்று விடலாம். கண்டமனூர், க.விலக்கு, ஆண்டிபட்டி வழியாக 60 கி.மீ., தூரம் கூடுதலாக செல்ல வேண்டும். நேரம், பணம் விரயம் ஆகிறது. வளர்ந்து வரும் இப்பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் அதிகம் நடந்து வருகிறது. கட்டுமான பொருட்களை மதுரை மாவட்டத்தில் இருந்து இந்த ரோடு வழியாக கொண்டு வருவதால் அடக்க விலை குறைகிறது. பொருட்களை எளிதில் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வரவும் முடியும். தற்போது தனியார் வாகனங்கள் இப்பகுதியில் அதிகம் சென்று வருகிறது.
அரசு, தனியார் பஸ் போக்குவரத்து துவங்கினால் பலருக்கும் நன்மை ஏற்படும். முதல் கட்டமாக ரோடு சீரமைக்க இரு மாவட்ட நிர்வாகங்கள் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியான திட்டம்
பிச்சைமணி, மயிலாடும்பாறை: ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்திலேயே இத்திட்டத்தை எளிதில் நிறைவேற்றி இருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது அரசியல் கட்சியினர் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கின்றனர்.
ஆனால் நிறைவேற்றும் நடவடிக்கை தான் இல்லை. க.- மயிலாடும்பாறை ஒன்றியத்தில் தொழில் துறைக்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை. இரு மாவட்டங்களை இணைக்கும் இப்பகுதியில் பஸ் போக்குவரத்து தொடங்கினால் விவசாயம் தவிர்த்த மாற்று தொழிலுக்கு வழி ஏற்படும்.